கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கிதாரியின் காதலி சிக்கினார்!
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண் உட்பட மற்றுமொரு சந்தேகநபரையும் மஹரகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல கைது செய்யப்பட்ட மற்றைய நபர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுகளும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு கொலையாளிக்கு நீதிமன்றில் உதவிய தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்