47 இலங்கை பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் - முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
Sri Lanka
Kuwait
By pavan
வீட்டுப் பணிப் பெண்களாக குவைத்தில் பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 47 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த 47 பெண்களும் இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தனர்.
இவர்கள் குவைத்தில் பணிபுரியும்போது தமது எஜமானர்களால் பல்வேறு இன்னல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
1,300 இலங்கை பெண்கள்
அதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் இவர்களை விரைவில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்