ஏதிலிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும்! அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்
அவுஸ்திரேலியாவில் ஏதிலிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது நேற்று(24) மத்திய 1 மணிக்கு அவுஸ்திரேலிய சிட்னி டவுன் ஹாலில் (Sydney Town Hall) ஆரம்பமாகியது.
பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
அவுஸ்திரேலியாவில் ஏதிலிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும் ,தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட்டு ஏதிலிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் , அடைக்கலம் கோருவோர் மனிதாவிமானமாக நடத்தப்பட்டு அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவேண்டும் மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக வசிப்பவர்களது அந்தஸ்து கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கபட்டு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஏதிலிகளுக்கு எதிரான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, குறித்த பேரணியில் பெருமளவான மக்கள் பங்குபற்றி தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
