நேட்டோ உறுப்புரிமை விட்டுக்கொடுக்கவும்! அமெரிக்கா நிபந்தனை குறித்து ஜெலென்ஸ்கி அதிர்ச்சி
நேட்டோஇராணுவக் கூட்டணியில் இணைவதற்கு ஈடாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து படைகளைத் திரும்பப் பெறுமா என அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் வினவியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கத் தரப்பினர் இந்தக் கேள்வியை எழுப்பியதாக, செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
சனிக்கிழமை வரை இந்த தகவலை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முறையாக எழுப்பப்பட்டுள்ள கேள்வி
இந்தக் கேள்வி முதல் முறையாக எழுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் உறுதியான எந்தவொரு முன்மொழிவும் இல்லை என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் தனது படைகளைத் திரும்பப் பெறாது என்றும், ஆனால் கீவ் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள், அதன் ஆயுதப் படைகளுக்கான நிதி மற்றும் புனரமைப்புக்கான பணத்தைப் பெற்றால், இந்த விவகாரத்தை ஒரு பொது வாக்கெடுப்புக்கு விடக்கூடும் என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |