2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

Saudi Arabia Flight World
By Shalini Balachandran Feb 09, 2026 07:19 PM GMT
Report

உலகளாவிய வான்வழிப் போக்குவரத்துத் துறை 2026ஆம் ஆண்டில் பாரிய விரிவாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், சவூதி அரேபியா, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் விமான நிலையக் கட்டமைப்பு மற்றும் புதிய வழித்தடங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில், சவூதி அரேபியாவின் கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம் (JED) தனது மெகா விரிவாக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.  

2026 FIFA உலகக் கோப்பை! கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

2026 FIFA உலகக் கோப்பை! கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

விமான நிலையம் 

2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 114 மில்லியன் பயணிகளைக் கையாளும் இலக்குடன், சுமார் 115 பில்லியன் சவூதி ரியால் மதிப்பிலான இத்திட்டம் “விஷன் 2030” இன் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம் | Global Aviation Expansion 2026 Saudi Vietnam Faa

இதன் முதற்கட்டமாக, 2026ஆம் ஆண்டிற்குள் முனையம் 1-இன் கொள்ளளவு 15 மில்லியனால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, ஏர் பிரான்ஸ் - கே.எல்.எம் (Air France-KLM) குழுமம் ஆசியாவிற்கான தனது சேவைகளை மறுசீரமைத்து வருகிறது.  

சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு

சிட்னியை உலுக்கிய பலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு

விமானச் சேவைகள் 

இதனடிப்படையில், 2026 மே முதல் பாரிஸ் - மணிலா இடையிலான நேரடி விமானச் சேவைகள் பருவகாலச் சேவையாக (Seasonal) மாற்றப்படவுள்ளதுடன், பேங்காக் மற்றும் பூக்கெட் போன்ற அதிக கேள்வி நிலவும் ஆசிய வழித்தடங்களில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம் | Global Aviation Expansion 2026 Saudi Vietnam Faa

அத்தோடு, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA), 2026ஆம் நிதியாண்டிற்காக 2.89 பில்லியன் டொலர் நிதியை விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் முனையங்களை நவீனப்படுத்துவதற்காக மட்டும் ஒரு பில்லியன் டொலர் போட்டித்தன்மையுடனான மானியமாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்!

பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்!

செயற்கை நுண்ணறிவு 

தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாமின் லாங் தான் (Long Thanh) சர்வதேச விமான நிலையம் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனது செயல்பாடுகளைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, வடக்கு வியட்நாமில் கியா பின் (Gia Binh) சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம் | Global Aviation Expansion 2026 Saudi Vietnam Faa

இத்தகைய திட்டங்கள் மூலம் 2026-இல் 95 மில்லியன் பயணிகளைக் கையாள வியட்நாம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வான்வழிப் போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் ஊடுருவல் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதுடன், பாதுகாப்பான பயணச் சூழலை உறுதிப்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

37 ஆண்டுகால மரபை மீறிய ஈரானின் உச்சதலைவர் கமேனி

37 ஆண்டுகால மரபை மீறிய ஈரானின் உச்சதலைவர் கமேனி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019