வேலைநிறுத்தத்தை தற்மாலிகமாக ஒத்திவைத்த GMOA!!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று (06) காலை 08.00 மணி முதல் ஒத்தி வைப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின தலைவர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
தலைவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வியாழக்கிழமை (09) அமைச்சருடன் தமது பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை கலந்துரையாடல் நடைபெறும்
இந்த நிலையில், இன்று வெளிநாடு செல்லும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ நாட்டிற்கு திரும்பிய பின்னர், வரும் வியாழக்கிழமை அதுகுறித்த கலந்துரையாடல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடு காரணமாக மருத்துவர்களின் இடமாற்றங்களை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |