வைத்தியர்களுக்கு தீர்வு வழங்காவிடின் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - ஹரித அலுத்கே
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உடனடி தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைகள்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக வைத்தியர்களை அச்சுறுத்தும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.