ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka Police
Tamils
Galagoda Aththe Gnanasara Thero
By Shadhu Shanker
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஞானசார தேரரை அதிபரின்(ரணில்) விசேட பொது மன்னிப்பின் கீழ் மாத்திரமே விடுதலை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர்
விசேட அரச மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் (13) கைதிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் குறித்த பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ஞானசார தேரருக்கு கடந்த மார்ச் 28 ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |