மீண்டும் சிறைக்கே சென்ற தேசபந்து! நீதிமன்றத்தின் உத்தரவு
புதிய இணைப்பு
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை அன்றிலிருந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் 20 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டார்.
2023 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் தேசபந்து தென்னகோன் உட்பட 08 பேரை கைது செய்யுமாறு பெப்ரவரி 27 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்