யாழ். காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பாய்மரப் படகுகள்!
புதிய இணைப்பு
நேற்றையதினம் சென்னையில் (Chennai) இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த 2 பாய்மரப்படகுகள் மீண்டும் நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன.
நேற்று (03) மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த பாய்மரப்படகுகள் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டுள்ளன.
400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காகக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். (Jaffna) காங்கேசன்துறைக்கு 10 பேர் அடங்கிய குழு 2 பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்து வருகை தந்துள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்றையதினம் (03.04.2025) மாலை 7.30 மணியளவில் யாழை வந்தடைந்தனர்.
400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.
பாய்மரப்படகு
இன்று மீண்டும் நாகப்பட்டினம் செல்லவுள்ள இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையில் நிறைவடையவுள்ளது.
பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்