ஞானசார தேரர் விவகாரம் : காவி அரசியலுக்குத் தமிழர்களின் பதில்...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தற்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவேண்டும் எனக் கோரி பௌத்த பிக்குகள் குழுவொன்று நான்காவது நாளாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், அரச தரப்பு பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினரும் மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளதுடன் பொது மன்னிப்பு வழங்க கூடாது எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களுக்கமைய, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேணடும், வழங்க கூடாது என்ற கோணத்தில் பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்த மேலும் பல விடயங்களை மக்களுடன் ஐபிசி தமிழ் நிகழ்ச்சியில் காண்க ....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |