ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது - அநுர அரசை எச்சரிக்கும் தேரர்
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முற்றாக நிராகரித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) பதுளையில் நடைபெற்ற 'தேசிய மக்கள் சக்தி' மகளிர் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தனது அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்கும் என்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகள் சார்பில் கோட்டே கல்யாணி சாம தர்ம மகா சங்க சபை ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என அனுநாயக்கர் கொட்டபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
[3F24G0N[
நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும்
கோட்டே ரஜமகா விகாரையில் நடைபெற்ற கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனுநாயக்கர் கொட்டபிட்டியே ராகுல தேரர் மேலும் கூறியதாவது, "எமது சங்க சபை கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காகவே கூடியது.

அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்களையும் உடனடியாக ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தப் போவதில்லை. எனினும், ஞானசார தேரருக்காகவும் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளுக்காகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
அவர்களுக்காக நாம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பை ஒருபோதும் கைவிடமாட்டோம். அதேபோன்று, ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்காகவும் பௌத்த கலாசாரம் மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாம் தொடர்ந்து செயற்படுவோம்.
இந்த விடயத்தில் எமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. எமது சங்க சபை ஏற்கெனவே எடுத்துள்ள தீர்மானத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்தும் செயற்படும்" எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |