சட்ட விரோதமாக இந்தியா செல்ல தயாராக இருந்த 7 நபர்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சிறிலங்காவில் வசிக்க முடியாத நிலையில் இந்தியா தப்பி செல்வதற்காக முயற்சித்த இரு குடும்பங்களை சேர்ந்த 7 நபர்கள் நேற்றைய தினம் பேசாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பேசாலை காவல்துறையினரால் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதாவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா இரு பெண் ஒரு ஆண் உட்பட மூன்று பெரியவர்களுக்கும் தலா 50000 சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன் நான்கு பிள்ளைகளையும் பெற்றோர்களுடன் சேர்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி