குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்
Mahinda Amaraweera
Sri Lankan Peoples
By Jaso
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.
ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று ரன்ன, வடிகல பிரதேசத்தில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்கேற்புடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானது. இங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஆடுகள் வழங்கப்பட்டன.
ஆடுகள் பகிர்ந்தளிப்பு

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 07 விவசாய தொழில் முனைவோர் கிராமங்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.