பறக்கும் படையிடம் சிக்கிய கிலோக்கணக்கான தங்கம், வெள்ளி
இந்தியாவில் இப்போது தேர்தல் காலம். கட்சிகள் தமது பக்கம் மக்களை ஈர்ப்பதற்காக நன்கொடைகளையும், பணத்தையும் அள்ளிவீசுவார்கள்.
தாம் ஆட்சிக்கு வந்தால் அது செய்வோம்,இது செய்வோம் எனத் தெரிவித்து வாக்காள பெருமக்களை கவரும் அரசியல் கட்சிகள் பணத்தையும் இலவச அன்பளிப்புக்களையும் வாரி வழங்குவர் .
பறக்கும் படை
எனினும் இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை என்ற படைப்பிரிவை உருவாக்கி தகுந்த ஆதாரமில்லாமல் கொண்டு செல்லப்படும் பணம்,நகை என்பவற்றை பறிமுதல் செய்து வருகிறது.
கைப்பற்றப்பட்ட தங்கம்,வெள்ளி
இவ்வாறு சிவகாசியில் இருந்து வந்த கூரியர் வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதில் சுமார் 6 . 3 கிலோ தங்கம் மற்றும் 2 . 7 கிலோ வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பறப்பட்ட பொருட்கள் பிரபல நகைக்கடைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட போதிலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |