யாழில் ஆலயத்துக்கு சென்ற பெண்ணிடம் வழிப்பறி - சிசிரிவியில் சிக்கிய சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By pavan
வழிப்பறிக் கொள்ளை
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி ஒன்று அபகரிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிசிரிவி காணொளி
இந்த வழிப்பறி தொடர்பான சிசிரிவி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி