கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் பாயும் நதி எங்கு உள்ளது தெரியுமா?
இந்தியாவில் (India) ஏராளமான ஆறுகள் உள்ளன. அவை பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரங்களாக காணப்படுகிறது.
குறிப்பாக விவசாயிகள் பாசனத்திற்காக அதனை நம்பியுள்ளனர், அதுமட்டுமல்லாமல் தங்களது அன்றாட தேவைகளுக்காக நதிநீரை நம்பியுள்ளனர்.
தங்கத் துகள்கள்
ஆனால் நதி நீரில் தங்கம் பாய்ந்தால் எப்படி இருக்கும்? ஆம் இந்த நதி நீரில் மக்கள் காலை முதல் மாலை வரை தங்கத் துகள்களை சேகரித்து வருகின்றனர்.
அரசியை விட சிறிய அளவிலான 60 முதல் 80 தங்க உருண்டைகள், நாளொனொன்றுக்கு இந்த பகுதியில் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுபர்ணரேகா நதி ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா வழியாக பாய்கிறது. இந்த நதி தண்ணீருடன் தங்கத் துகள்களை எடுத்துச் செல்கிறது.
கனிம வளங்கள்
இந்த தனித்துவமான அம்சத்தை காண தொலைதூரத்தில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். எப்படி நதிநீரில் தங்கத் துகள்கள் இருக்கும் என்று பலரும் ஆச்சரியமாக கேட்கலாம்.
இந்த நதி கனிம வளங்கள் மிக்க நதி என்று புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பாறைகள் வழியாக செல்லும் இந்த நதிநீர் உராய்வதால் சிறிய தங்க துகள்களை வெளியிடுகின்றன.
பின்னர் அவை கரைந்து நீரோட்டத்துடன் நகருகிறது. அறிவியல் ரீதியாக இந்த செயல்முறை முற்றிலும் இயற்கையானது என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
