விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்
வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த குறித்த பத்தாயிரம் தங்கப் பொருட்களில் ஆறாயிரம் இலங்கை வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று(22) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
விரிவான அறிக்கை
முந்தைய விசாரணையில், பத்தாயிரம் (10,000) தங்கப் பொருட்களை எடைபோட்டு, அவற்றில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்த விரிவான அறிக்கையை அதன் நீதிமன்றத்திற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் அதிகாரசபையால் பரிசோதிக்கப்பட்ட ஆறாயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இது தொடர்பாக மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த அதிகாரிகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
