மற்றுமொரு லொரியிலிருந்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்பு
புதிய இணைப்பு
தங்கல்லை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு லொரியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று(22) இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொரியில் இந்த போதைப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு சிறிய லாரியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பாக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சுமார் 200 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற லொரியொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தங்காலை, கொடெல்ல, கடுருபோகுன வீதியில் வைத்து இந்த லொரி கைப்பற்றப்பட்டுள்ளது.
தர்பூசணி பழங்கள் கொண்டு செல்லும் போர்வையில் குறித்த போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதங்கள்
அத்துடன், போதைப்பொருளுக்கு மேலதிகமாக சம்பந்தப்பட்ட லொரியில் இருந்து, ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவால்வர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட லொரியை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
