ஒரு வருடம் பூர்த்தியடைந்தும் நாடு அபிவிருத்தி அடையவில்லை - சாடும் மகிந்த
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும், நாட்டு மக்கள் உணரக்கூடிய வகையில் அபிவிருத்திப் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இதனை தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு, விஜேராமவில் அமைந்துள்ள உத்தியோபூர்வ இல்லத்தில் இருந்து அண்மையில் தங்காலைக்கு சென்றார்.
அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மகிந்தவை காண அவரது ஆதரவாளர்கள் பயாகலையில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டில் கூடியிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிகழ்வில் நாமல் ராஜபபக்சவே இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர் என்ற வகையில் அவரை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
