நாமல் ராஜபக்சவே நாட்டின் எதிர்காலத் தலைவர்! சூளுரைக்கும் ரோஹித
நாமல் ராஜபபக்சவே (Namal Rajapaksa) இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர் என்ற வகையில் அவரை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ரோஹித்த அபேகுணவர்தனவின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவது குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்வது கிடையாது. பதவிகள் தான் என்னைத் தேடி வந்துள்ளது.
மீண்டும் ஒன்றிணைய வேண்டும்
அமைச்சர் பதவிகளைக் கூட நான் பல தடவைகள் நிராகரித்துள்ளேன். அதேபோல நான் மொட்டுக் கட்சியை விட்டும் விலகவும் இல்லை.
மொட்டுக் கட்சி என்னை விலக்கவும் இல்லை. தற்போதைய நிலையில் நாமல் ராஜபக்சவே இந்நாட்டின் எதிர்காலத் தலைவராகும் சாத்தியத்தைக் கொண்டுள்ளார்.
அவரை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
மொட்டுக் கட்சியை விட்டும் விலகிச் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
