சிறைச்சாலை ஊடகப்பேச்சாளரின் வீட்டில் காணாமாற்போன தங்க நகைகள்
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் பொரளை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகப் பேச்சாளரின் உத்தியோகபூர்வ இல்லம் பொரளை மகசீன் சிறைச்சாலையில் அமைந்துள்ளதுடன், உத்தியோகபூர்வ இல்லம் சிறைக் கைதிகளால் சுத்தம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்க நகைகள் மாயம்
கடந்த நவம்பரில் இருந்து வீட்டில் உள்ள தங்க ஆபரணங்கள் குறித்து குடியிருப்பாளர்கள் எந்த விசாரணையும் செய்யவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அண்மையில் விசாரணை நடத்திய போது தங்க நகைகள் காணாமல் போனதை உணர்ந்த ஊடக பேச்சாளரின் மனைவி பொரளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டை சுத்தம் செய்யும் கைதிகள்
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் ஊடகப் பேச்சாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெருமளவிலான கைதிகள் சுத்தப்படுத்தியுள்ளதாகவும், எனவே இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, விசாரணைகள் காரணமாக கைதிகளில் ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி தொடர்பாளர் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.
பொரளை காவல் நிலைய பிரதான னாவல்துறை பரிசோதகர் விதானகே உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
