அட்சய திரிதியை நாளில் வீழ்ச்சி கண்டுள்ள தங்க நகை வியாபாரம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அட்சய திரிதியை நாளான இன்று நகைக் கடைகளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைத் தளம்பல்கள் காரணமாக மக்கள் தங்க நகைகளை கொள்வனவு செய்வதில் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை.
உலக சந்தையில் தங்கத்திற்கு ஏற்படும் விலைத் தளம்பல், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பணத்தின் பெறுமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணிகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.
தங்க நகை வியாபாரம்
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை கடல் தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர்.
இந்த இரண்டு துறைகளிலும் ஏற்பட்ட பாதிப்பே இவ்வாறான நிலைக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட சில வர்த்தக நிலையங்களில் தமக்கு போதுமான வியாபாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
