பூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து தங்க நகைகளை திருடிவிட்டு மீளவும் பூட்டிச் சென்ற திருடர்..! யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kanna
வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார்.
வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து..
11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவே திருட்டுப்போயுள்ளன என்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த திருடர் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவீட்டு மீளவும் முன் கதை மூடிவிட்டுச் சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காவல் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி