விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்களின் தங்கங்கள்.....! அரசின் முக்கிய அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Tamils
Sri Lanka Police Investigation
By Raghav
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வசமிருந்த இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி என்பன பதில் காவல்துறை மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பத்தரமுல்ல (Battaramulla) இராணுவ தலைமையகத்தில் இன்று (02.05.2025) இந்த நிகழ்வு நடைபெற்றது.
பதில் காவல்துறை மா அதிபர்
பதில் காவல்துறை மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஊடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர் அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் (Sri Lanka Army) தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்