பாரிய சரிவுடன் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்
தங்க விலை
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அது குறித்து தெரிந்து கொள்வது தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து துல்லியமாக முடிவெடுக்க உதவும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் மீதான லாப வளர்ச்சி விகிதம் 9.4 சதமாக உயர்ந்துள்ளது.
2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, 2021-இல் 3.6 சதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
கணிசமான அளவு குறைந்துள்ள தங்க விலை
கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இன்றைய தங்க நிலவரம் [ 13.09.2022 ]
24 கரட் | 1 கிராம் | ரூபாய் 22,050.00 |
24 கரட் | கிராம் (1பவுன் ) | ரூபாய் 176,400.00 |
22 கரட் | 1 கிராம் | ரூபாய் 20,220.00 |
22 கரட் | 8 கிராம் (1 பவுன்) | ரூபாய் 161,700.00 |
21 கரட் | 1 கிராம் | ரூபாய் 19,300.00 |
21 கரட் | 8 கிராம் (1 பவுன்) | ரூபாய் 54,350.00 |