22 கரட் தங்கத்தின் இன்றைய விலை - உயரும் டொலர்
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (02) இதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) நிலவிய அதே விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியினால் இன்று (02) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீதங்களின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்க விலைகளில் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளில், அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |