சடுதியாக மாற்றமடைந்த தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 பவுண் தங்கத்தின் விலை

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் (17.01.2023) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 195,700.00 ரூபாவாக உள்ளது.
அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 179,400.00 ரூபாவாக பதவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தங்கத்தின் விலை
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 693,410.00 ஆகும்
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 24,460.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 195,700.00
22கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,430.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,400.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,410.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,250.00