இலங்கையில் மீண்டும் தங்க விலையில் மாற்றம் : ஒரே நாளில் 15,000 ரூபாய் அதிகரிப்பு
புதிய இணைப்பு
இலங்கை சந்தையில் இன்று (21) தங்கம் விலை இரண்டாவது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்று (21) முற்பகல் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் தற்பொழுது பவுண் ஒன்றுக்கு 5000 ரூபாயால் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,516 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாய் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்க விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று (21.01.2026) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், நேற்று (19) முற்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனையாகிவந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு பின் 2000 ரூபாயால் அதிகரித்து 370,000 ரூபாயாக, விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய தங்க விலை
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்க விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்களைத் தாண்டியதே உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |