கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் (Slightly Unhealthy) காணப்பட்டது.
கோட்டை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இலங்கை வளிமண்டலத் தரச் சுட்டெண் (SL AQI) 104 முதல் 144 வரை பதிவாகியுள்ளது.
சுகாதாரப் பாதிப்பு
நேற்று காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது.
இவை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்களுக்குப் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாகச் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற உணர்திறன் கொண்ட குழுவினர் (Sensitive groups) மிகவும் தீவிரமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |