தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சத்தை தொட்ட தங்க விலையானது படிப்படியாக குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய (31.10.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,224,577 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 43,200 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 345,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 39,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 316,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 37,800 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 302,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        