ஃப்ளைதுபாய் சம்பவம்: துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு : ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற 'ஃப்ளைதுபாய்' விமானத்தின் துணை விமானிக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் வியாழக்கிழமை அன்று, தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட விமானிக்கும் தெஹ்ரானுக்கும் (ஈரான் அரசுக்கும்) இடையே ஏதேனும் தொடர்பு இருப்பது குறித்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டதா என்று கேட்டனர்.
ஈரானுடன் தொடர்பு
அதற்கு அவர், "நாங்கள் அது குறித்து இப்போது விசாரித்து வருகிறோம் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அதற்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது;இருப்பினும், நாங்கள் அது குறித்து இப்போது விசாரித்து வருகிறோம்," என்று ட்ரம்ப் கூறினார். அவர் கூடுதல் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருந்தால், அமெரிக்கா பதிலடி கொடுக்குமா என்று கேட்கப்பட்டபோது, "ஓ, அவர்கள் மிக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாவார்கள், கவலைப்பட வேண்டாம்," என்று தெரிவித்தார். "அவர்களிடமே கேளுங்கள்," என்று அவர் மேலும் கூறினார். "என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் மிக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாவார்கள்," என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |