அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பேச்சுவார்த்தைகளின் போது மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளான போதிலும் ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஒருபோதும் தவிர்க்கவில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் "நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தையைத் தவிர்த்ததில்லை.
அரசாங்கத் தலைவர்கள்
இனிமேலும் தவிர்க்க மாட்டோம், அமெரிக்கா மூன்று முறை எங்கள் நாட்டை இலக்கு வைத்துத் தாக்கிய போதிலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளோம்.

அரசாங்கத் தலைவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் நிலவுவதுடன் அனைவரும் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் கவனமாக இருக்கின்றனர்.
கடல் வழியிலான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான், ஈராக், துருக்மேனிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுடன் தரைவழியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பாதைகளை விரிவாக்க ஈரான் முயன்று வருகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |