சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு : பிணை மனு மீதான தீர்ப்பும் அதே திகதியில்
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியனராச்சி ஆகியோரை இம் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சாமர சம்பத்தின் தனிப்பட்ட செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான தீர்ப்பை அதே திகதியில் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டார்.
கூடுதலாக, இவ்வழக்கில் நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட தினேஷ் பெரேராவைக் கைது செய்து, அவரைக் காவலில் எடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் ஒரு திறந்த பிடியாணையைப் பிறப்பித்தார்.
முதல் இணைப்பு
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத்தி தசநாயக்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம, பிணைத் தீர்ப்பை வழங்குகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இலஞ்சம் பெற்றமை
பொஸ்பேட் ஏற்றுமதிக்காக மூன்று தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்குவதற்கு ரூ. 8.1 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |