தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு - இன்றைய தங்க விற்பனை நிலவரம்!
பொருளாதார மாற்றங்கள் காரணமாக அண்மையில் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சற்று வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையானது தற்போது மீண்டும் அதிகரிப்பை காட்டியுள்ளது.
உலக சந்தையில் இன்றையதினம் (5) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இலங்கை ரூபாவின் படி 573,279 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முழு விபரம்
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 161,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 148,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 141,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,230 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,710 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இருப்பினும், ஆபரணத் தங்கத்தின் விலை மேற்கண்ட விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
