ஒரே நாளில் 11,000 ரூபாயால் குறைவடைந்த தங்க விலை
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (19) இரண்டு முறை மாற்றம் ஏற்பட்ட நிலையில் 11,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (18) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 391,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9,000 ரூபாயால் குறைந்தது.
இந்தநிலையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 382,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தங்கவிலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.
விலை நிலவரம்
தற்போதைய சந்தை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதற்கமைய, 24 கரட் தங்கம் 1 கிராம் 47,500 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் 1 கிராம் 43,700 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் தொடர்ந்தும் மாற்றங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |