அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் இதோ
கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (28.09.2026) தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 369,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (28) அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
தங்க விலை
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |