ஒரே நாளில் தங்கத்தின் விலை 4,000 ரூபாவினால் அதிகரிப்பு
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (15) தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
தங்க விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று (28) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் ,இன்று 4000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை
அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் , 3600 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
ரூபாயின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (29) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அதன் விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாக காணப்படுகின்றது.
கடந்த 27 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320.40 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 330.81 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |