இலங்கையில் 4,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
புதிய இணைப்பு
உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இன்று(21) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,788 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக பதிவாகியிருந்தது.
வெள்ளியின் விலை
அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து, 84.59 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...c |