திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை..!
இன்றைய நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் இன்றைய (2) விலை 654,007 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய நிலவரம்

நேற்றைய (1) நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்பட்டது.
அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.
வரலாறு காணாத உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி இரண்டு இலட்சம் ரூபா வரை சென்றிருந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்து வருகின்றது.
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்