சடுதியாக குறைவடையும் தங்க விலை..!தங்கம் வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்
தங்க விலை
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந் நிலையில், தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும் என உலகத்தங்க சபை தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது தங்க நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவில் தங்கத்திற்கான விலை குறைந்தால் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தைக்கு வந்த பழைய தங்க நகைகள் மறுசுழற்சிக்கு வந்தமையினால் விலை கட்டுப்படுத்தப்படும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கணிசமான அளவில் குறைந்துள்ள தங்க விலை

இதேவேளை,இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதற்கமைய, கடந்த நாட்களில் 22 கரட் தங்கத்தின் விலை 166,000 ரூபாவாகவும்,24 கரட் தங்கத்தின் விலையும் 180,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.