வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை..! இன்றைய தங்க நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றமை தெரிய வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
உலக சந்தை
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தற்போது நாளுக்கு நாள் திருப்பம் ஏற்பட்டு வருகின்றமை தெரிய வருகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 604 890 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் நேற்றும் இன்றும் சிறிதளவு சரிவைக் காணக்கூடியதாக உள்ளது.
24 கரட் | 1 கிராம் | ரூபாய் 21,340.00 |
24 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 170,700.00 |
22 கரட் | 1 கிராம் | ரூபாய் 19,570.00 |
22 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 156,500.00 |
21 கரட் | 1 கிராம் | ரூபாய் 18,680.00 |
21 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 149,400.00 |
