தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றம்..! இன்றைய தங்க நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்து.
இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் மீதான லாப வளர்ச்சி விகிதம் 9.4 சதமாக உயர்ந்துள்ளது.
2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, 2021-இல் 3.6 சதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இன்றைய தங்க நிலவரம்
கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் | 1 கிராம் | ரூபாய் 21,200.00 |
24 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 169,600.00 |
22 கரட் | 1 கிராம் | ரூபாய் 19,440.00 |
22 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 155,500.00 |
21 கரட் | 1 கிராம் | ரூபாய் 18,550.00 |
21 கரட் | 8 கிராம் (1பவுன் ) | ரூபாய் 148,400.00 |
