புலம்பெயர்ந்த நண்பனால் அடித்தது அதிஷ்டம் - திடீர் கோடீஸ்வரனான மாற்றுத் திறனாளி நண்பன்
வெளிநாடொன்றில் வாழ்க்கையைத் தொலைத்து நின்ற கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான ஒருவர் அவரது நண்பரால் திடீர் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் பினு பலகுனில் எலியஸ் (37). இவர் அபுதாபியில் வசித்து வருகிறார். பினுவின் நண்பரான ஷபீர் (40) தற்போது கோடீஸ்வரராக மாற இவர் காரணமாக இருந்திருக்கிறார்.
இது தொடர்பில் பினு கூறுகையில்,
4 மாதங்களுக்கு முன்னர் முடி திருத்தகம் ஒன்றில் ஷபீரை சந்தித்தேன். அவர் வீல்சேரில் உட்கார்ந்திருந்தார், ஷபீருடன் பேசும் போது அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் எனக்கு தெரியவந்தது. அதன்படி ஷபீர் மொத்த மரக்கறி வியாபாரம் செய்து வந்தார், இந்தநிலையில் ஒரு நிறுவனத்தால் அவர் ஏமாற்றப்பட்டார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட அதிர்ச்சி அவரது உடல்நிலையை கடுமையாக பாதித்தது.உயர் இரத்த அழுத்தம் இரத்தக்கசிவுக்கு வழிவகுத்தது.
மேலும் அவர் நான்கு மாதங்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தொடர் மருத்துவ செலவுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார். அடிக்கடி பிக் டிக்கெட் லொட்டரி விளையாடும் பழக்கம் கொண்ட அவர் நாங்கள் நண்பர்களாக ஆன பின்னர் என்னை டிக்கெட் வாங்கி தரும்படி கேட்டுக் கொண்டார்.
ஷபீர் பணத்தில் என் குழந்தை பெயரில் டிக்கெட் வாங்கினேன். அந்த டிக்கெட்டுக்கு Dh500,000 (இலங்கை மதிப்பில் ரூ 4,83,66,496.89) பரிசு விழுந்துள்ளது என கூறியுள்ளார்.
சபீர் கூறுகையில், நிதி நெருக்கடியான இந்த நேரத்தில் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. என் நண்பருடன் சேர்ந்து மீண்டும் எனது தொழிலை தொடங்க திட்டமிட்டுள்ளேன். இறுதியாக என் வாழ்க்கையில் நம்பிக்கையான விடயம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
