கனடா வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு நற்செய்தி
கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசு ஏற்கும் என அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்
இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து PR விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும்.
இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும்.
Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும் . ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.
TOEFL Essentials test குறித்த முக்கிய தகவல்கள்
🔸 இந்த தெரிவு 90 நிமிடங்கள் நீளமுடையது.
🔸 கேட்கும் திறன், வாசிப்பு, எழுத்து, மற்றும் பேசும் திறன் ஆகிய நான்கு பகுதிகளையும் மதிப்பீடு செய்கிறது.
🔸 தெரிவுக்குப் பின் கேட்கும் மற்றும் வாசிப்பு திறனுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும்.
🔸 முழுமையான மதிப்பீடு 6 நாட்களில் வெளியிடப்படும்.
🔸 பல கல்வி நிறுவனங்களுக்கு இந்த மதிப்பெண் அறிக்கையை இலவசமாக பகிர முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்