சீனா ஏர்லைன்ஸின் புதிய விமான சேவை: வெளியான அறிவிப்பு
ஷாங்காய் (Shanghai) மற்றும் டில்லி (Delhi) இடையே நேரடி விமானங்களை சீனா (China) ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
இதனடிப்படையில், நவம்பர் ஒன்பது முதல் விமான சேவை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியா (India) மற்றும் சீனா உறவுகளை மேம்படுத்துவதன் அடுத்த கட்டம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
விமான சேவை
இந்த விமான சேவை, வாரத்திற்கு மூன்று முறை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து மதியம் 12:50 மணிக்குப் புறப்படும் இந்த பயணம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 5:45 மணிக்கு டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணசீட்டுக்கள்
அதேபோல் டில்லியில் இருந்து இரவு 7:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு ஷாங்காய் புடாங்கில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கான பயணசீட்டுக்களை இப்போதே பெற்றுகொள்ளலாம் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
