அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது
குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் (25.03.2025) பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான சுற்றறிக்கை
மேலும் இந்த சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், புதிய சம்பள அளவுத்திட்டத்திற்குள் கீழே குறிப்பிடப்படும் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
01.2019.04.22 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 09/2019 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 2,500/- மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவு.
02. 2022.01.13 ஆம் திகதி அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2022 இற்கமையச் செலுத்தப்படும் ரூபா 5,000/- மாதாந்தக் கொடுப்பனவு.
மேலும், சம்பளத்தின் நிகர அதிகரிப்பின் மாதாந்தம் உரித்தாகும் தொகை மற்றும் மாதாந்தம் செலுத்தப்படாத தொகை கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிரலில் காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 15 மணி நேரம் முன்