வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் பெண்களுக்கு அரசின் அறிவிப்பு
காவல்துறையில் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள்
காவல்துறையில் காணப்படும் ஆயிரக்கணக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களில் இலங்கை காவல் துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகள், சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
