கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
கனடாவின் (Canada) தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 76,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
இதனால் கனடாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாகப் பதிவாகியிருந்த நிலையில் அதற்கு முந்தைய மாதத்தில் 6.7 சதவிகிதம் என பதிவாகியிருந்தது.
நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியம்
கடந்த டிசம்பரில் இந்த எண்ணிக்கை 91,000 என இருந்தாலும், தற்போதைய நெருக்கடியான சூழலில் 76,000 வேலைவாய்ப்புகள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் வேலையின்மை விகிதம் 14.2 சதவிகிதத்தில் இலிருந்து 13.6 சதவிகிதமாகக் குறைந்தது.
நிரந்தர ஊழியர்களுக்கான சராசரி மணிநேர ஊதிய வளர்ச்சி 3.7 சதவிகிதமாக இருந்தது. இது டிசம்பரில் திருத்தப்பட்ட 3.8 சதவிகிதத்தில் இருந்து சற்று குறைவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிரந்தர குடியுரிமையுடன் வேலை
இதேவேளை, கனடாவில் புதிய குடியேற்ற திட்டங்கள் மூலம் பிறநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமையுடன் வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
திறமையான தொழிலாளர்களை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்ப்பதற்காக கறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்