கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில் (Canada) குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
நிவாரண கொடுப்பனவு
அதன்படி, கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் திருமணமாகாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குடும்பம் ஒன்றின் தேறிய வருமானம் மற்றும் 19 வயதுக்கு கீழ் பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுத் தொகை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |